பிரளயன் – அவர் எனக்கு அறிமுகமாவதற்கு முன்னதாகவே அறிவேன். ஒரு வீதி நாடகக்காரராக அவர் ஓர் அற்புதமான மனிதர். அவருடைய வீதி நாடகங்கள் அனைத்தையுமே நான் பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத அழகுடையவை அவை.
‘இந்த வஞ்சியர் காண்டம்’ மிக நன்றாக இருக்கிறது… மரபினால் கண்ணகிக்கு வேறு ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. மெரினா கடற்கரையில் கையிலொரு சிலம்பை தூக்கிக் கொண்டு நிற்கும் தோற்றம்தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் இந்த நாடகத்தை படிக்கும் பொழுது , கண்ணகியின் வயதும் தோற்றமும் மிகவும் புதுமையாக நினைவிற்கு வருகின்றன.. அதை உருவாக்கி கொடுத்திருக்கும் பிரளயனுக்கு என் வாழ்த்துகள்.
நாடகத்தின் காட்சிகள் மனதைக் கவர்கின்றன. ஒரு காலகட்டத்தின் பொலிவு நன்றாக கொண்டுவரப்பட்டிருக்கிறது நாடகத்தில். எல்லோரும் இதைப்படித்து அந்த அழகை அனுபவிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
– ந.முத்துசாமி