“இசையால் மனிதத்தை விதைத்துச் சென்ற கடந்த நூற்றாண்டின் மகத்தான இசைக் கலைஞனை இன்னும் மனசுக்கு நெருக்கமாக்கிவிடுகிறது இந்நூல்!”
– ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர்
பாப் மார்லியையும் அவரது பாடல்களையும் நண்பர் ரவிக்குமார் தான் எனக்கு அறிமுகம் செய்தார். என் இசை ரசனைக்குள் ஒரு சூறாவளி வீசிய அந்த நாள், மிக நன்றாக நினைவிலிருக்கிறது. விடுதலை, காதல், விளையாட்டு, நம்பிக்கை, கண்ணீர் என பாப் மார்லி இசைத்தது மானுடக் கனவின் இசை. இளமையின் மூர்க்கமும், அழகும், சாகசமும், கொண்டாட்டமும் மார்லியின் குரல்வளையை ஓர் அதிசய இசைக்கருவியாக்கியது. அவனை, அவன் இசையை, வாழ்வை, அதன் அதிர்வு குறையாமல் இந்நூல் வழியே வரைந்திருக்கிறார் ரவிக்குமார்.
– கலைச்செல்வன் ஆசிரியர், ஜூனியர் விகடன்