அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த தமிழக கிராமத்தின் வாழ்வைப் பற்றிய எண்ணற்ற விஷயங்களை நமக்குத் தெரிவிக்கும் தமிழ் வசன நூல் இதைத் தவிர வேறொன்றும் கிடையாதென்றே சொல்லலாம். அதுமட்டுமின்றி, ராஜமய்யர் எள்ளி நகையாடி ஏளனம் செய்த எத்தனையோ அம்சங்கள் இன்றுகூட ஜீவனுடன் இருந்து வருகின்றன.
ஸ்ரீராஜமய்யர் புதிதாகத் தமிழ்க்கதை எழுதுவதில் உண்மையான திறமை காட்டியிருக்கிறார்” என்று பாரதி சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
புதிய தமிழ் இலக்கியத்தின் மூன்று தூண்கள் ராஜம் ஐயர், பாரதி, புதுமைப்பித்தன்.