எல்லா வரலாறுகளும் உண்மைகளை உள்ளது உள்ளபடி சொல்லி விடுவதில்லை. வெளி உலகத்துக்கு மறைக்கப்பட்டு, திரிக்கப்பட்டு, பலம் படைத்தவனின் வசதிக்கு ஏற்ப, காலத்துக்குக் காலம் வரலாறுகள் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படித் திரிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களை உங்கள் மனசாட்சியின் முன் கொண்டுவந்து சேர்க்கும் ஒரு முயற்சியே இந்த நூல்.
யூதர்களின் நீண்ட நெடிய வரலாற்றையும், ஹிட்லருக்கும் ஜெர்மானியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயான வெறுப்பு எங்கிருந்து தொடங்கியது என்பதையும், அதன் வரலாற்றுப் போக்குகளையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் படைப்பு.
வரலாற்றில் வதைமுகாம்களின் இருண்ட முகத்தை வெளிப்படுத்தும் ஆய்வுப் பார்வை மட்டுமல்ல இந்தப் புத்தகம். மறக்கக் கூடாத வரலாற்றுச் சம்பவங்களின் மூலம், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை உணர்த்தும் அறம் சார்ந்த ஒன்று.
இந்த நூலின் ஆசிரியர் றின்னோஸா புவிசார் அரசியல், வரலாறு, தொழில்நுட்பம், சூழலியல் மற்றும் சமூகவியல் போன்ற வேறுபட்ட தளங்களில் பல கட்டுரைகளையும், தொடர்களையும், புத்தகங்களையும் தொடர்ந்து எழுதி வருபவர். யூதர்களின் வதைமுகாம்களை நேரில் பார்வையிட்டு, பல அரிய தகவல்களை அறிந்துகொண்டு,