பூசி மெழுகும் சம்பிரதாயமான வார்த்தைகளுக்குள் சிக்காத புத்தகம் இது. மாலினி ஓர் ஆசிரியர். விருதுகள் பல பெற்றவர். அவர் பெற்ற விருதுகளுள் பெரிய விருது – ‘என் கனவு ஆசிரியர் திருமதி மாலினி அம்மா’ என்று அவரின் மாணவர்கள் அவரைக் கொண்டாடுவதுதான்!
பல கேள்விகளை எழுப்பி விடை தேடுகிறது வகுப்பறை மொழி.
எது வகுப்பறை? எது வகுப்பறை மொழி? என்பவை அடிப்படையான கேள்விகள்.
“எங்கு ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றுக் கொள்கிறார்களோ அதுவே வகுப்பறை.”