யுகபாரதி கவிதைகள்

LKR4,950.00

5 in stock

Author: யுகபாரதி...

தனித் தனி நூலாக கவனம் பெற்ற யுகபாரதியின் ஒன்பது கவிதை நூல்களையும் மொத்தமாகப் பார்க்கையில், தொடர்ச்சியாக அவர் இயங்கி வந்துள்ளதை அறியமுடிகிறது. 1998இல் ‘மனப்பத்தாயம்’ என்னும் மிகச்சிறிய கவிதைத் தொகுப்பு மூலம் அறிமுகமான யுகபாரதி, ‘பஞ்சாரம், தெப்பக்கட்டை, நொண்டிக்காவடி, அற்றியர்கள் உள்ளே வரலாம், தெருவாசகம், ஒருமரத்துக் கள், முனியாண்டி விலாஸ், மராமத்து ஆகிய தொகுப்புகளைத் தந்திருக்கிறார். சொல்முறையிலும் சொல்லப்பட்ட கருத்துகளிலும் யுகபாரதியின் கவிதைகள் தனித்துவமானவை. மாறிவரும் கவிதைகளின் போக்குகளுக்கு ஏற்ப எழுதாமல், தம்முடைய கவிதைகளின் வழியே காலத்தையும் சமூகத்தையும் பிரதிபலிக்கும் கவிஞராக அவர் இருந்துவருகிறார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தம்மைக் கைதூக்கி விட்டவை கவிதைகளே எனும் எண்ணத்துடன் எழுதிவரும் அவர், திரைத்துறையில் பாடலாசிரியராகவும் இயங்கிவருகிறார். நெருக்கடியான தருணங்களில் ஆறுதலையும் நிம்மதியான நிமிடங்களில் மகிழ்வையும் வழங்கும் அவர் கவிதைகள், பாடலுக்கும் கவிதைக்கும் உள்ள மெல்லிய கோட்டை சித்திரமாக்கும். செயலில் ஈடுபடுகின்றன. அகத்திலும் புறத்திலும் அவர் கவிதைகள் நிகழ்த்தும் அற்புதங்களை இந்நூலில் உணரலாம்.

5 in stock