பணத்தால் ஆளப்படும் இந்த உலகம் ஒரு மாய உலகம். பொருட்கள் உயிர் பெறுகின்றன, பேசுகின்றன, மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றன. பொருட்களின் ஆட்சியில் இருந்து விடுபட முடியாமல் மனிதர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
மாய உலகின் திரையை விலக்கி உண்மை மனித உறவுகளைப் புரிந்துகொள்ள இயலுமா? அதைப் புரிந்து கொண்டால் இந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியுமா? இவ்வுலகம் தோற்றுவிக்கும் மயக்கங்களின் ஊடாக நம்மை அழைத்துச்செல்கிறார், மார்க்ஸ்.
மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை தொடர்நூல்களாக வெளியிடும் திட்டத்தில் பணத்தால் இயங்கும் உலகத்தின் மாயத்தன்மை பற்றிய பகுதி இந்நூலில் இடம்பெறுகிறது.