“மண்ட பத்தரம்!”. இந்த புத்தகத்தில் நானே பல இடங்களில் என் கருத்துக்களோடு முரண்பட்டு இருக்கிறேன். முன்பு –சொன்னதற்கு மாறாக மாற்றிப் பேசி இருக்கிறேன். காலமும், நாம் சந்திக்கிற மனிதர்களும், நவீன சிந்தனைகளும் நமது சொந்த எண்ணங்களின் மீதே முரண்பாட்டை ஏற்படுத்துகின்றன. முரண்பாடுகள் நமது சிந்தனைகளை பண்படுத்துகின்றன. நவீனத்தை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கின்றன. புதியவற்றை மனத் தடையில்லாமல் அணுக உதவுகின்றன. அடுத்தவரோடு முரண்படுவதை விட தன்னோடு முரண்படுவது இன்னமும் அலாதியான அனுபவம்.
முன்பு இப்படிச் சொன்னோமே, இப்போது மாற்றிச் என்ன சொல்வார்கள் என்று பயந்து, சிந்தனைகளை சொன்னால் சுருக்கிக் கொள்ளாமல் மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கிற துணிச்சலையும் முரண்படுதல்தான் கொடுக்கிறது.
இந்த புத்தகத்தில் முரண்பாட்டைப் போலவே இயல்பாய் அமைந்த இன்னொரு விஷயம், வெவ்வேறு தரப்புக்கு தேவைப்படும் செய்திகளை பேசுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு கட்டுரை உங்களுக்குமிகவும் தேவைப்படலாம். இப்படி எழுதவேண்டும் என்று திட்டமிட்டு எழுதவில்லை. அப்படியாக அமைத்துவிட்டது.
-கோபிநாத்