ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து தொடங்கி, கிரேக்க, ஆங்கில, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியப் படைப்புகள், தொன்மங்கள், அறிவியல் -புனைகதைத் திரைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன் மகளுக்குப் பொருளாதாரத்தைக் கற்பிப்பது போன்ற நூதன முறையில் கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளர் யானிஸ் வருஃபாகிஸ் எழுதியுள்ள இந்த நூல், முதலாளியப் பொருளாதாரம், அது இயங்கும் விதம், அதன் பிடியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கூறுகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவற்றில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிவந்த யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis), 2015இல் ‘ஸிரிஸா’ என்ற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி கிரீஸில் ஆட்சி அமைத்தபோது அதில் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். ‘ஐரோப்பாவில் ஜனநாயகத்துக்கான இயக்கம் (Democracy in Europe Movement) என்ற அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான வருஃபாகிஸ், பொருளாதாரம் பற்றியும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் உலகில் செலுத்திவரும் ஆதிக்கம்பற்றியும் பல நூல்களை எழுதியிருக்கிறார். தற்போது ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.
- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
LKR1,815.00
1 in stock