இருவரில் ஒருவரை சிலுவையில் அறையலாம் என்ற நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட இயேசு மிக ஆபத்தானவராக கருதப்படுகிறார். ஆகையால் இயேசுவின் மரணதண்டனையை உறுதி செய்து, திருட்டு குற்றத்திற்கு தண்டனைக்குள்ளான மற்றொருவனை விடுக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட அந்த மனிதன்தான் பாரபாஸ். சிலுவையை சுமந்து செல்லும் இயேசுவை தன்னிச்சையாக தொடர்கிறான் பாரபாஸ். சிலுவையில் அறையப்பட்ட அந்த மனிதனைப் பார்க்கிறான். அந்த மனிதனின் உயிர் உயிர் அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைந்துகொண்டிருந்தது. தன்னை விடுவித்துவிட்டு இவனை சிலுவையில் அறைகிறார்கள் என்றால் இவன் தன்னை விட பெரும் குற்றத்தை செய்தவனாக இருக்கவேண்டும். ஆனால் இந்த மனிதனை பார்த்தால் அப்படி தெரியவில்லையே. உடல் மெலிந்தவனாக பலம் அற்றவனாக இருக்கும் இவன் அப்படி என்ன குற்றம் செய்திருப்பான் . எல்லா கண்களும் தன்னையே மொய்ப்பதாக உணர்கிறான். இறந்துகொண்டிருக்கும் இந்த மனிதனின் தாயைப் பார்க்கிறான். மற்றவர்களின் துயரத்திற்கும் இந்த பெண்ணின் துயரத்திற்கும் பெரிய வேறுபாட்டை உணர்கிறான். மற்றவர்களை விட இவள் அதிகமாக அவனுக்காக துயருற்றிந்தாள். மகன் சிலுவையில் தொங்குவதற்கு மகனையே குற்றம் சாட்டிக் குறைக்கூறுவது போன்ற பாவம் அவள் முகத்தில் இருந்தது. பாரபாசுக்கு உறவு என்று யாரும் கிடையாது. ஒருவேளை தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் தனக்காக யார் அழுவார்கள் என்று எண்ணிப் பார்க்கிறான். இயேசுவின் உயிர் பிரிகிறது. மகனின் உடலை பார்த்த தாய் தன் துயரத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தமுடியாமல் திணறிக் கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒரு பெண் பாரபாஸை அத்தாயிடம் சுட்டிக்காட்டி ஏதோ சொல்கிறாள். அந்த பார்வையிலேதான் எவ்வளவு பரிதாபமும், குற்றம் சாட்டும் தன்மையும் நிறைந்திருந்தது. அந்த தாயின் பார்வையை தன் வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாது என்பதை உணர்கிறான். கல்லறையில் அந்த மனிதனை அடக்கம் செய்து ஒரு பெரிய கல்லை வைத்து மூடும்வரை அங்கு நின்றுகொண்டிருந்தவன் அந்த இடத்தை விட்டு ஜெரூசலத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.
LKR891.00
6 in stock