பழந்தமிழ் நூல்கள் நவீனமான வரலாறு
தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்டு நாமக்கல்லில் வசித்துவரும் ஆய்வறிஞர் பொ.வேல்சாமி புவை பட்டம் பெற்றவர். பாவலரேறு பாலசுந்தரனாரின் மாணவர். தொண்ணூறுகளில் தமிழ்ச்சூழவில் பல புதுமைகளை நிகழ்த்திக்காட்டிய நிறப்பிரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவர். சமூகவியல் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில் கடுபாடு கொண்டவர். பேரா.கா.சிவத்தம்பியிடம் பயின்று அவர் ஆய்வுவழித் தாக்கம்பெற்றுத் தன் பாதையை அமைத்துக்கொண்டவர் மொழி, இலக்கியம். பண்பாடு, வரலாறு ஆகியவற்றின்மீது ஆய்வுகளை நிகழ்த்திவருகிறார். இவர் ஆய்வுத் நிறத்தைப் பாராட்டி தமிழ்நாடு அரசு. தமிழ்த்தென்றல் திரு.வி.விருது. விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவு விருது. விகடனின் நம்பிக்கை மனிதர் விருது. விஜ தொலைக்காட்சி நீயா நானாவின் சிறந்த ஆளுமை விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் முழுமையாக வெளிவரக காரணமாக இருந்தவர். பொற்காலங்களும் இருண்ட காலங்களும், கோவில் நிலம் சாதி பொய்யும் வழுவும், வரலாறு என்ற கற்பிதம் ஆகிய நூல்களின் ஆசிரியர். கால்டுவெல்லின் பரதகண்ட புராதனம். தொல்காப்பியம் எழுத்ததிகார இளம்பூரணர் உரை பெயர் தெரியாத ஆசிரியரின் விளக்கவுரை. மதுராவிஜயம் குறித்த நீ கந்தசாமிப் பிள்ளையின் திறனாய்வுக் கட்டுரைகள்.ஆகியவற்றின் பதிப்பாசிரியர்
- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
LKR3,960.00
4 in stock