எரிக்மரியா ரிமார்க் ஜெர்மன் நாவல் உலகில் ஒரு தனி இடம் வகிப்பவர். இவர் புகழை எவரும் குறைவாக மதிப்பிட முடியாது. பல்வேறு நாடுகளில் பல மொழிகளில் இவர் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரிமார்க்கின் நாவல்கள் உலகப் புகழ்பெற்றவை. ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்லாமல்அமெரிக்காவிலும் இவர் நாவல்களுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. முதல் மகாயுத்தம் முடிந்ததும் உலகமே அலறிப் புடைத்தது. நாசகரமான இந்த யுத்தங்களுக்கு ஒரு முடிவே இல்லையாவென்று அனைவரும் கதறினார்கள். நாவலாசிரியர்களும் ராஜீயவாதிகளும் அறிஞர்களும் ‘யுத்தம் ஒழிக’ என்ற பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். யுத்த ஒழிப்புப்பற்றி வந்த நூல்கள் ஏராளமானவை. இந்நூல்களில் ரிமார்க் எழுதிய நாவல் தனித்துலங்கியது. அதுவே உலகப் பிரசித்திபெற்ற ”All Quiet on the Western Front” என்னும் நாவல். ரிமார்க்குக்கு 13 வயதிருக்கும்போதே அவரை யுத்தகளம் அழைத்தது. யுத்தகளத்தில் அவர் கண்ட காட்சிகள், கோரங்கள் அவர் உள்ளத்தைத் தைத்தன. அவர் மனம் பட்ட வேதனையின் எதிரொலியே பிரஸ்தாப நாவல். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரமாக எழுதி இருமாத காலத்தில் அந்த அற்புத நாவலை உருவாக்கினார். மற்ற ஆசிரியர்களின் நூல்களைவிட இவர் நூல் உலகப் பிரசித்தி பெற்றது.
துன்பக் கேணி (Thunba Keni) | Suffering
Publication :
LKR3,250.00
3 in stock
LKR3,250.00
3 in stock