பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலித மக்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் 1894ஆம் ஆண்டில் ‘பஞ்சமர் இலவசப் பள்ளிகளை’ சென்னை அடையாறில் உள்ள தியோசாபிகல் சொசைட்டியின் நிறுவனர் கர்னல் ஆல்காட் தொடங்கினார். இப்பள்ளிகளைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான நிதிவேண்டித் தன் நண்பர்களுக்காக 1902ஆம் ஆண்டில் ‘பஞ்சமர் இலவசப் பள்ளிகளின் செயல்பாடுகளைப் பற்றிய ஓர் அறிக்கையை அவர் தியோசாபிகல் சொசைட்டியின் வெளியீடாகப் பதிப்பித்த நூல் ‘பறையர் வரலாறு’ (The Poor Pariah). இந்நூலில் அவர் தமது பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்ப, சமூக, சமயப் பண்பாட்டுப் பின்னணி போன்றவற்றையும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டவர்கள் ஆனார்கள் என்பதையும் விளக்குகின்றார்.
தலித் மக்களும் கல்வியும் / Dalit people and education
Publication :
LKR715.00
3 in stock
3 in stock