ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு- – குடியேற்ற அரசியலைப் பேசுகிறது இந்த நாவல். 300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய இடம்தேடி ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இங்கிலாந்துக் குடிமக்களையும் இன்று வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியா செல்லும் ஆசிய நாடுகளின் குடிமக்களையும் இணைகோடுகளாகச் சித்திரிக்கிறது நாவலின் கதை.
இடப்பெயர்வு ஏற்படுத்தும் சலனங்களினூடே மாறிவரும் மனித உறவுகளையும் உணர்வுகளையும் நுண்ணுணர்வுடன் சித்திரிக்கிறது. நேரடியான காட்சிகளையும் குறியீடுகளையும் கொண்ட கதையாடல் பல்வேறு நுட்பங்களையும் அடுக்குகளையும் கொண்டு சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
‘நட்சத்திரவாசிகள்’ என்னும் தனது முதல் நாவலுக்காக ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது நாவல் இது.