உடன்பிறவாத் தம்பி குகன், உடன்பிறந்த பரதன் ஆகிய இவ்விரு பாத்திரப் படைப்புகளின் தூய உள்ளத்தையும் அன்பின் ஆழத்தையும் கம்பன் கவிதைகள் மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார் அ.ச.ஞா. இந்நூல் இவரது நுண்மான் நுழைபுலத்திற்கு ஒரு சான்று.
கம்பன் கவிதையை ரசித்து மகிழ இது ஒரு நுழைவு வாயில். ஒரு ஆய்வு நூலை ஆர்வத்துடன் வாசிக்கும் அளவுக்கு மாற்றும் திறம் அ.ச.ஞாவுக்கு மட்டுமே உரியது.