நெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 25,000க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார்.இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தைகயும் விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதரமான நூல் இது தான். இதில் இடம் பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.நெப்போலியன் ஹில், 1883ம் ஆண்டு, அமெரிக்காவிலுள்ள விர்ஜீனியா மாநிலத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஹில் தன்னுடைய இளம் வயதிலிருந்தே, ஆன்ட்ரூ கார்னகி, தாமஸ் எடிசன், அலெக்சான்டர் கிரகாம் பெல் போன்ற மாபெரும் சாதனையாளர்களைப் பற்றிக் கற்றறிந்தார். வெற்றி அறிவியலில் குறிப்பிடத்தக்கதொரு சிந்தனையாளராகவும் வல்லுநராகவும் அவர் உருவெடுத்தார். மகத்தான சாதனைகளைப் படைத்த ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’ என்ற புத்தகம் 1937ல் வெளியானது. இது கடந்த 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுவரை இந்நூல் 7 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. அவர் ஒரு மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும்கூட. அமெரிக்கா நெடுகிலும் பயணம் செய்து வெற்றிக் கொள்கைகள் குறித்து எண்ணற்ற ஊர்களில் பேசி இலட்சக்கணக்கானோரை அவர் ஊக்குவித்துள்ளார். 1962ல் அவர் ‘நெப்போலியன் ஹில் அறக்கட்டளை’யை நிறுவி, தனது கொள்கைகள் என்றென்றும் தழைத்திருக்க வழி வகுத்தார். 1970ல் தனது 87வது வயதில் அவர் காலமானார்.
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்
Publication :
LKR1,643.00
1 in stock
1 in stock