உலகமயமாக்கமும் அது தொடர்பான விவாதங்களும் நமக்குப் புதிதல்ல. ஆனால் கொதித்தெழு என்கிற இந்த நூலில், இஸ்ரேலிய பத்திரிகையாளரும் விமர்சகருமான நடாவ் இயால் முன்வைக்கும் காட்சிகளும் புள்ளிவிவரங்களும் அலசல்களும் புதியவை.
கடந்த முப்பதாண்டுகளில் உலகமயமாக்கத்தை இடதுசாரிகள் மட்டும் எதிர்க்கவில்லை. பல இடங்களில் தீவிர வலதுசாரிகளும் எதிர்க்கிறார்கள். சில இடங்களில் ஜனநாயக – முற்போக்குவாதிகளும் வேறு சில இடங்களில் பாசிச-பிற்போக்குவாதிகளும்கூட உலகமயமாக்கத்தை நிராகரிக்கிறார்கள்.
உலகமயமாக்கமும் மிகப்பெரிய வல்லரசு அல்லது பிராந்திய வல்லரசு நாடுகளில் உருவாகும் தேசியவாதங்களும் சில சமயம் ஒன்றோடொன்று ஒத்துப்போகவும் செய்கின்றன, முரண்படவும் செய்கின்றன. தேசியவாதங்களின் எழுச்சி உலகமயமாக்கத்தின் வேகத்தை மட்டுப்படுத்தியிருக்கின்றன.
பென்சில்வேனியாவின் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், ஏதென்சின் புறநகர் கம்யூன்களில் வசிக்கும் அனார்கிஸ்ட்கள், ஜெர்மனியின் நியோ-நாஜிகள், சிரிய நாட்டு அகதிகள் என நானாவிதமான பிரிவினர்களுக்கிடையில் ஓர் ஊடகவியலராக நடாவ் இயால் மேற்கொண்ட பயணங்கள் நமக்களிக்கும் சித்திரம், உலகமயமாக்கத்துக்கு எதிரான போக்கு தீவிரமடையும் என்பதுதான்.
- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
கொதித்தெழு உலகமயமாக்கலுக்கு எதிரான உலகளாவிய கிளர்ச்சி / Boil up A global revolt against globalization
Publication :
LKR3,900.00
3 in stock