குல்லமடை

LKR600.00

5 in stock

Author: Aadhavan Saravanabavan

வாழ்க்கை எளிதானதாக இல்லை. ஆனாலும் அதற்குள்ளிருக்கின்றன ஆயிரமாயிரம் தேன் கூடுகளும் நூறு நூறு வானவில்லும் உள்ளன என உணர்த்துகின்றன ஆதவன் சரவணபவனின் ‘குல்லமடை’ நூலில் இடம்பெற்றுள்ள கதைகள்.

இதில், காலத்தின் நிழலும் வாழ்வின் ஒளியும் ஒன்றையொன்று மோதிச் சமனிலை கொள்ளத் துடிக்கின்றன.

அந்தத் துடிப்பில்தான் நம்முடைய இதயம் இயங்குகிறதா என்றொரு கணம் திகைக்க வைக்கிறார் ஆதவன் சரவணபவன்.

அன்பு, காமம், போர், இடப்பெயர்வு, அகதி வாழ்க்கை, நீங்கிச் செல்லுதல், தவித்தும் தனித்தும் நிற்றல், திசையெட்டும் பரவி விரிதல், அமுதைக் காண விளைதல் என விரிந்து விரிந்து செல்லும் இந்தக் கதைத் தொகுப்பு சிறியதொரு சரித்திரத்தின் முகம்.

இருவருக்கும் அதுதான் கடைசித் தருணமாகும். பிழை, சரி என்பதற்கு அப்பால் ஒரு கடமையைச் செய்யப் பணிக்கப்பட்டவர்கள்.

கடமைக்குக் கொலை செய்வது, கொள்கைக்குக் கொலை செய்வது, பழிக்குக் கொலை செய்வது, இப்படிக் கொலைக்கு வியாக்கியானம் தேடும் உலகம்.

இவர்களையும் சில காரணங்களுக்காக இந்த வேலைக்கு அமர்த்தியுள்ளது. கையில் இருந்த துப்பாக்கிகள் ஆயத்தமாகின…” என இருளடர்ந்த காலத்தின் கனதியோடு பல நூறு நெருக்கடிகளின் வாழ்க்கையை இந்தக் கதைகளின் வழியே தருகிறார் ஆதவன் சரவணபவன்.

இலங்கையின் உள்நாட்டுப் போரும் அதிலிருந்து மீண்டு சிங்கப்பூரில் நிகழ நேர்ந்த புதிய கள வாழ்வும் இடையீடு செய்யும் கதைக்களத்தில் பெருகிக் கொண்டிருக்கும் கதைகள் இவை.

ஒரு நெருக்கடிக் கால நெடுந்தொலைவுப் பயணியின் வழிநெடுகச் சந்திக்கும் பல்வேறு மனிதர்களும் தோன்றும் காட்சிகளும் நிகழும் கணங்கள் பல்வேறு வாழ்க்கைச் சுவடுகளையும் அசாத்தியங்களையும் காண்பிக்கின்றன.

– தோழர். சிவராச கருணாகரன்

5 in stock