கிறிஸ்தவத்தில் தீண்டாமை

Publication :
LKR594.00

1 in stock

Author: Mark

“ஆயர்களாகிய நாங்கள். கிறிஸ்துவுக்கும் திருமறைக்கும் எதிர்ச்சான்றாக இருக்கும் சாதி மனப்பான்மையை மக்கள் அனைவரும் அடியோடு களைந்தெறிந்து உண்மைக்கும் நீதிக்கும் ஒற்றுமைக்கும் பிறரன்புக்கும் சான்று பகரும் நன்மக்களாய் வாழ முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆண்டவரின் பெயரால் அறை கூவல் விடுவிக்கின்றோம்.’ – (தமிழக ஆயர்கள். திருச்சி 14, 15-2-1982)

“நமது கத்தோலிக்க சமூகத்தில் பல இடங்களில் சாதி அடிப்படையில் தனிப்பங்குகள், கோயில்கள். கோயில்களில் தனி இடங்கள். தனித்திருவிழாக்கள். தனிக் கல்லறைகள். தனிச் சவ வண்டிகள் இருக்கின்றன. இவையெல்லாம் எல்லா மக்களுக்கும் சாதி வேறுபாடு இல்லாமல் பொதுவாக்கப்படவேண்டும். மேலும் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களிடமிருந்து வரி வாங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பல இடங்களில் பங்கு பேரவைகள் பங்கு நிர்வாகக் குழுக்கள் முதலியவற்றில் இடமோ, பொறுப்போ தரப்படுவதில்லை, அவர்களுடைய தெருக்களில் திவ்விய நற்கருணை அல்லது தேர்ப்பவனிகள் செல்வதில்லை. இத்தகைய பாவமான வழக்கங்கள் நம் கத்தோலிக்க சமுதாயத்தில் இனியும் தொடராமலிருக்க கவனிக்க வேண்டியது நம்மனைவரையும் சார்ந்த கடமையாகும்.”

(தமிழக ஆயர்கள். தவக்கால கூட்டுத்திருமுகம் 1988),

“அரசாங்கத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுகின்ற. மற்றும் அநீதிகள் பலவற்றிற்கு ஆளாக்கப்படுகின்ற தலித் மக்களின் நிலையைக் கண்டு ஆயர்களாகிய நாங்கள் மிகவும் மனவேதனை அடைகிறோம். திருச்சபையில் தலித் மக்களுக்கு சமூக நீதி வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான ஒரு கோரிக்கை ஆகும்.”

– (தமிழக ஆயர்கள், மதுரை 31-1-1992)

1 in stock