கஸாக்குகள் – நாவல் ‘கொசாக்’ இனத்தின் இனவியல் ஆவணம் என்றுகூடச் சொல்லலாம். கொசாக் (Cossack) என்ற சொல் ‘கஸாக்’ என்ற துருக்கிய சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் ‘விடுதலை பெற்றவன்’ என்பதாகும். கஸாக்குகள் மிகச்சிறந்த போர்க்குணம் கொண்டவர்கள். இதனால் ரஷ்ய படையினர் அவர்களை ஏற்று அங்கீகரித்திருந்தினர். இதன் பின்னணியில்தான் கஸாக்குகள் கதைக்களம் விரிகிறது.
நாவலின் ஒலினின் கதாபாத்திரம் நாயகத் தன்மைகொண்டது. அதுபோல் மார்யானா கதாபாத்திரத்தின் பெண்மை, வலிமை, தனித்துவம் எல்லாம் சிலிர்ப்பூட்டக்கூடியவை. இந்த நாவலின் மையச்சரடு காதல். அதன் மேன்மையையும் உன்னதத்தையும் கதையின் விரிவில் நாம் உணரமுடியம். இதன் ஊடே அறம், ஒழுக்கம், மெய்யியல் என்று பலவற்றையும் நாவலின் இன்னொரு அடுக்கில் நாம் மேலும் புரிந்துணரும் வகையில் தல்ஸ்தோய் தனது புனைவு மொழியைக் கையாண்டிருக்கிறார்.
டால்ஸ்டாய் இல்லாவிட்டால் நம்முடைய இலக்கியம், மேய்ப்பவர் இல்லாத ஆட்டுக் கிடையைப் போல ஆகிவிடும்.
– ஆண்டன் செகாவ்
தல்ஸ்தோய் – முழு உலகம் அவர்… மெய்யாகவே, மிகப் பெரிது இம்மானுடர் சாதித்த பணி. முழுதாய் ஒரு நூற்றாண்டினது அனுபவத்தின் சாரத்தையெல்லாம் வடித்துத் தந்தார், அதிசயிக்கத்தக்க சத்திய சீலத்தோடும் வல்லமையோடும் எழிலோடும் இதைச் செய்தார்.
– மக்சிம் கார்க்கி
லேவ் தல்ஸ்தோயிடம் எனக்குள்ள மனப்பாங்கு, வாழ்க்கையில் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டு, பக்தியுடன் வழிபடுகின்றவனுடைய மனப்பாங்கு ஆகும்.
– மகாத்மா காந்தி