எம்.வி. வெங்கட்ராம் அவர்களின் எழுத்து நெசவெல்லாம் பட்டு நெசவுதான். ஆனால், எவ்வளவு கைதேர்ந்த நெசவாளியும் எம்.வி.வி. எழுத்து நெசவில் செய்துள்ள நுட்பமான கலைத்திறனைச் செய்துவிட முடியாது. ஒரு பழைய இந்தி புத்தகத்தில் வாமனமாய் இரண்டு பக்கங்களில் கிடைத்த ஒரு மூலம் இவர் கையில் திரிவிக்கிரமமாய் ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலாக வளர்ந்திருக்கிறது. “அந்த இரண்டு பக்கங்களைத்தான் நாவலாய்ப் பெருக்கினேன்” என்கிறார். பெருக்கலினும் பெருக்கல் பெரிய பெருக்கல். இரண்டு பக்கம் 570 பக்கமாய் வளர்ந்து வளர்ந்து பாஞ்சாலிக்குக் கண்ணன் அருளிய சேலையைப் போலப் பெருகி இருக்கிறது.
LKR4,550.00
3 in stock