ஒரு சிறிய கிராமம். பனைமரம்தான் அதன் இயற்கை வளம்.அங்குள்ளவர்கள், அம்மரத்தையே நம்பிக் காலத்தைக் கடத்துகிறார்கள். அவர்களில் இருவர், கால்களை நகர்த்தி வேறு ஊர்களுக்குப் போய், அங்கு கள் இறக்கிப் பிழைக்கத் தொடங்கினார்கள். அந்த ஊர்களின் முன்னேற்றம் அவர்களின் மனதில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்த, அதனிமித்தம் தங்கள் பிள்ளைகள் இருவரைப் படிப்பிக்கிறார்கள். பல கஷ்ட துன்பங்களுக்கிடையில் அவர்களும் ஆர்வத்துடன் படித்து ஆசிரியர்களாகிறார்கள். தமிழறிஞர் ஒருவரால் நாஸ்திக கொள்கையினால் கவரப் பெற்று காலப்போக்கில் உலகலாவிய ரீதியில் பரந்து விரிந்த மார்க்சீய கொள்கையில் ஊறித் திளைத்து, தமது கிராமத்து வாலிபர்களை மட்டுமின்றி, அண்டை அயலில் உள்ளவர்களையும் ஒன்றிணைத்து சாதியொடுக்குமுறைக்கு எதிராக மட்டுமின்றி, உழைக்கும் மக்களை நசுக்குபவர்களுக்கெதிரான போராட்டங்களையும் முன்னெடுத்து சகலரையும் எழுச்சி பெறச் செய்தார்கள். இந்த வரலாறுதான், ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி!’யாகும்.
- You cannot add "அடிப்படை இலத்திரனியல் | Basic Electronics" to the cart because the product is out of stock.
LKR1,386.00
5 in stock