மானிட வரலாற்றில் மிகவும் அருமையாகவே மகத்தான மனிதர்கள் உருவாகின்றனர். இவர்கள் மனித சமூகத்திற்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள் போன்றவர்கள் காலத்தின் அத்தகைய ஒரு மகத்தான உருவாக்கமே உரோமப் பேரரசர் மார்க்கஸ் அரேலியஸ் பிளேட்டோவின் தத்துவ ஆட்சியாளருக்கான (Philosopher King) ஒரேயொரு உதாரணமாக வரலாற்றில் இவர் பதிவாகியுள்ளார். சிறந்த ஐந்து பேரரசர்களில் ஒருவராக வரலாற்றாசிரியர்களினால் புகழப்படுகின்றார். எல்லையற்ற ஆற்றலினாலும், அதீத ஞானத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி என்று இவருடைய ஆட்சிக்காலம் வரலாற்றில் வர்ணிக்கப்படுகின்றது. சிறு வயதில் இருந்தே ஒழுக்க விழுமியங்களை போதித்து, அவற்றை பின்பற்றுவதனை உறுதிப்படுத்தி வளர்க்கப்பட்ட இவர் தன்னுடைய வாழ்க்கைக்காலம் முழுவதும் உயர்வான இலட்சியங்களை பின்பற்றியவராகவே வாழ்ந்துள்ளார். ‘பிற மனிதர்களிடம் கனிவாகவும்,உங்களிடம் கண்டிப்பாகவும் நடந்துகொள்ளுங்கள்’ என்னும் இவர் தான் கற்ற தத்துவங்களை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த நூலில் உள்ள குறிப்புக்களை எழுதுவதனை பழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த சுய குறிப்புக்களே பிற்காலத்தில் Meditations என்ற பெயரில் நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது
உரோமப் பேரரசன் மார்க்கஸ் அரேலியசின் சுயதியானங்கள்
Publication :
LKR1,650.00
2 in stock
2 in stock