இஸ்லாம், அல்லாஹ், பள்ளிவாசல், நோன்பு என்னும் வார்த்தைகளைத் தவிர முஸ்லிம்கள் பற்றிய மேலதிக வாசிப்புக்களுக்கான வாய்ப்புகளோ சந்தர்ப்பங்களோ என் வாழ்வில் இதுவரை கிடைத் திருக்கவில்லை. ஆனாலும் தீமையிலும் ஒரு நன்மையென்று சிறை வாசம் என்னை கற்கத் தூண்டியது. சிந்தனைக்கான வாய்ப்புகளை வாரி வழங்கியது.
எனது வாசிப்பும் அறிதலும் புரிதலும் எல்லைகளற்றுத் தொடர்ந்தன. வாசிப்பும் உரையாடல்களும் நிறைந்த எனது தேடல்கள் ஐ.எஸ், அல்கய்தா, வஹாபிஷம், தவ்ஹீத், ஜிஹாத், முஹம்மது நபி, இஸ்லாம், இஸ்லாமிய கிலாபத், திரு-குர்ஆன், ஹதீஸ், சுன்னிகள், ஷியாக்கள், சூபிகள், மக்கா, மதீனா, முகாலாய சாம்ராச்சியம், உதுமானியப் பேரரசு, இஹ்வானிஸம்…. என்று விரிவடைந்து கொண்டே சென்றன.
அதே வேளையில் இலங்கையில் அமைதியாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மத்தியில் எப்படி இந்த மத அடிப்படைவாத சிந்தனைகள் தாக்கம் செலுத்தத் தொடங்கின? மத்திய கிழக்கு நாடுகளுடனான வேலைவாய்ப்பு மற்றும் மார்க்கக் கல்வி போன்றவை காரணமான தொடர்பாடல்கள் எப்படியான அரபு மயமாக்கலை எம்மூர்களில் விதைத்தன? நம்மிடையே பிறந்து வளர்ந்த இந்த இளைஞர்கள் எப்படி இந்த வஹாபிஷ சிந்தனைகளின் பால் ஈர்க்கப்பட்டார்கள்? கேள்விகளுக்கும் பதில்கள் எனக்கு கிடைத்தன. என்கின்ற
ஈஸ்டர் படுகொலை( இன, மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்) | Easter Massacre
Publication :
LKR1,950.00
2 in stock
2 in stock