இலங்கை தமிழர் முழுமையான வரலாறு (கி.மு300 கி.பி 2000)

Publication :
LKR2,700.00

6 in stock

Author: Murugar Kunasingam

இந்நூலை எழுதுவதற்கான முக்கிய நோக்கம், இலங்கைத் தமிழரைப் பற்றி ஒரு முழுமையான வரலாற்றை எழுதவேண்டும் என்பதாகும் என்கிறார் இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் குணசிங்கம்.”இலங்கை வரலாறு சிங்கள பெரும்பான்மையினரைப் பிரதானமாக உள்ளடக்கியிருந்த ஒரு வரலாறாகத்தான் காணப்பட்டது. அவ்வேளையில் இலங்கையின் சிறுபான்மை மக்களான தமிழரின் வரலாறோ அல்லது தமிழ்ப் பாரம்பரிய பிரதேசங்களின் வரலாறோ பாடவிதானத்தில் சேர்க்கப்படவுமில்லை.இச் சந்தர்ப்பத்தில், ஆராய்ச்சி மாணவர்களிடத்தும், சாதாரண மக்களிடத்தும், பெரும்பாலான கல்விமான்களிடத்தும், தமிழரின் தேசியவிடுதலைப் போராட்டத்தைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாத ஒரு நிலைமையினைப் பரவலாக அவதானிக்கமுடிகிறது. இதற்கான அடிப்படைக் காரணம், இலங்கைத் தமிழர் பற்றிய பூரணமான, தெளிவான வரலாறு, வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்படாமையே ஆகும்.இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி சரியாக ஆய்வுசெய்து போதுனமான வரலாறு ஒன்றை எழுதுவதற்கு இலங்கையில் போதுமான மூலாதாரச் சான்றுகள் இல்லாததன் காரணமாக, இலங்கையோடு வரலாற்று ரீதியாகத் தொடர்புள்ள இந்தியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, ஐரோப்பா, அமேரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள பல ஆவணக் காப்பகங்கள், நூல் நிலையங்கள், அரச தாபனங்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்கள் ஆகிவற்றுக்குச் சென்று, இலங்கைத் தமிழர்கள் பற்றி, தமிழ்ப் பிரதேசங்கள் பற்றி, அங்குள்ள ஆவணங்களைத் தேடிப்பெற்று அவை உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு இந்நூல் வெளிவந்திருக்கிறது.” என்கிறார் பேராசியர் குணசிங்கம்.தமிழர் தோற்றமும் ஆரம்ப வரலாறும் இருண்ட வரலாற்றுக் காலம் சோழர் ஆக்கிரமிப்பும் அதன் விளைவுகளும் யாழ்ப்பாண இராச்சியமும் வன்னிச் சிற்றரசுகளும் போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பும் தமிழ்ப் பிரதேசங்களின் அழிவும் என்று நீள்கிற உள்ளடக்கம்

6 in stock