அடுத்தது என்ன? உலகை மறுகற்பனை செய்வோம் அவ்வளவுதான். • ஆஸாதி! – சுதந்திரம். கஷ்மீரின் வீதிகளில் ஒலிக்கும் முழக்கம் இந்தியா வெங்கிலும் எதிரொலித்தது. கஷ்மீரின் சிறப்பு அம்ச சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கியதை அடுத்து, அந்த மாநிலம் முடங்கியது. தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இணையத் தொடர்பு துண்டிக்கப் பட்டது. மீண்டும் கஷ்மீர் முழுக்கமுழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. போராட்டம், அடக்குமுறை, வன்முறை, உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள் . . . நாடு கொந்தளித்துக்கொண்டிருந்தது. பாசிச அரசின் செயல்திட்டம் தன் விஸ்வரூபத்தை எடுக்கத் தொடங்கியிருந்தது. திடீரென்று வீதிகள் அமைதியாகின. நடமாட்டங்கள் அனைத்தும் முடங்கின. கோவிட்-19 அச்சுறுத்தல் நவீன உலகை ஸ்தம்பிக்க வைத்தது. பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்திவரும் பெருந்தொற்று புதிய உலகிற்கான வாசலையும் திறந்துவிட்டிருக்கிறது, உலகை மறுகற்பனை செய்துபார்ப்பதற்கான வாய்ப்பை அது வழங்கியிருக்கிறது என்கிறார் அருந்ததி ராய். வலுப்பெற்றுவரும் எதேச்சாதிகாரச் சூழலில் சுதந்திரம் என்பதன் பொருள் என்ன என்று சிந்திக்கும்படி இந்தக் கட்டுரைகள் நம்மைத் தூண்டுகின்றன. நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் மொழியின் பங்கு என்ன, துயரார்ந்த இன்றைய சூழலில் புனைவுக்கும் மாற்றுக் கற்பனைகளுக்குமான இடம் எது என்னும் கேள்விகளை இந்தக் கட்டுரைகள் எழுப்புகின்றன.
- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
ஆஸாதி: சுதந்திரம்-பாசிசம்-புனைவு | Azaadi: Freedom. Fascism. Fiction
Publication :
LKR1,787.50
4 in stock
4 in stock