அர்த்தமுள்ள இந்துமதம் – கவிஞர்.கண்ணதாசன்:(தொகுப்பு)
புத்தகத்தில் அருமையான தத்துவங்கள்:
- எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு” என்று ஆரம்பிக்கிறார்.
- ‘இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?’ என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.
- பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.
- கடலின் ஆழமான பகுதிய்ல் அலை இருக்காது.
- வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப்பாருங்கள் பயங்கரக்காற்று அடிக்கும்.
- வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட கார் மேகத்தின் வேகம் குறைவு.
- நாய் ஓடுவதை விட யானை நடப்பதில், வேகம் அதிகம்.
- சலனமற்ற மெளனம் பல அர்த்தங்களைக் கொண்டது.
- பேசாமல் இருப்பவனே பெரிய விஷயத்தைச் சொல்பவன், பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.
- ஆரோக்கியத்திற்கு மெளனம் மிக அவசியம்.
- தவம் புரிகின்றவன் ‘ஓம் நமசிவாய” என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை.
அருமையான வரிகள்:
1. மரணமோ, சரித்திரத்தில் மகத்த்தான மணி மண்டபமாக்க் கருதப்படுகிறது.உயர்ந்தோர்,நல்லோர்,பெரியோர்கள்.ஞானிகள்-
2. இந்த வார்த்தைகளில் பாரத்த்தன் முழு வரலாறுகளும் அடங்கிக்கிடக்கின்றன.
3.அந்த விளக்குகள் ஒளியைத் தந்தன; நாம் வாழ்க்கைக் கண்டு கொண்டோம்.
4.அந்தக் கைகாட்டிகள் பாதையைக் காட்டின; நாம் போக வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம்.
5. அந்த மேகங்கள் மழை பொழிந்தன; நாம் நமது நிலங்களைச் செழுமையாக்கிக்கொண்டோம்.
கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை குறிப்பு :
-
பிறப்பு – 24.6.1927, சிறுகூடல்பட்டி
-
பெற்றோர் – சாத்தப்பன், விசாலாட்சி
-
மரபு – தன வணிகர்
-
இயற்பெயர் – முத்தையா
-
உடன்பிறந்தோர் – எண்மர்
-
கல்வி – ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
-
உயர்நிலைப் பள்ளி – அமராவதி புதூர், எட்டாவது வரை
-
1943 – முதற் பணி – திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
-
1944 – இலக்கியப் பணி – திருமகள் ஆசிரியர்
-
1944 – முதற் கவிதை – முதற் கவிதை
-
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
-
1949 சண்டமாருதம் ஆசிரியர்
-
1949 திரைப்படத் துறை பயிற்சி
-
1949 -முதற் பாடல் – படம் கன்னியின் காதலி,
-
பாடல் கலங்காதேதிருமனமே
-
1949 – அரசியல் – தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
-
1950 – திருமணங்கள் – பொன்னழகி, பார்வதி
-
1952-53 – முதற்காவியம் – மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
-
1952-53 – கதை வசனம் – இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
-
1954, – முதற் பத்திரிகை – தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
-
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
-
1957 – தேர்தல் – இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
-
1957 – திரைப்படத் தயாரிப்பு – – மாலையிட்ட மங்கை
-
1958-59 – சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
-
1960 – 61 – அரசியல் மாற்றம் – – தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
-
புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி – சம்பத் தலைமையில் துவக்கம்,
-
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
-
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
-
மீண்டும் திரைப்படம் – வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 – 66 – அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
-
1968-1969 – கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
-
1970 – ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
-
1971, 1975 – மலேஷியா பயணம்
-
1978 – அரசவைக் கவிஞர்
-
1979 – சாகித்ய அகாடமி பரிசு – சேரமான் காதலி
-
1979 – அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
-
1981 – அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
-
இறுதி நாட்கள் – உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
-
புனைபெயர்கள் – காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
- குடும்பம் – இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.