பொருளாதாரம், அரசியல், தத்துவம், அறவியல், அழகியல், வரலாறு ஆகியவற்றை ஒன்றிணைத்து மார்க்ஸியத்தை ஈடிணையற்ற புரட்சிகரத் தத்துவக் கோட்பாடாகக் காட்டும் முதல் தமிழ் நூல் இது.
‘அந்நியமாதல்’ என்ற நிகழ்ச்சிப்போக்குபற்றிய பல்வேறு பார்வை களை எடுத்துக் கூறும் இந்த நூல், அதுபற்றிய மார்க்ஸின் புரிதல் எவ்வாறு புரட்சிகரமான முறையில் மாறுபட்டுள்ளது என்பதை விளக்குகிறது. இளமைக் கால மார்க்ஸின் சிந்தனையிலிருந்த தத்துவ தரிசனத்தின் நீட்சியாகவும் வளர்ச்சியாகவும் முதிய காலத்தில் மார்க்ஸ் எழுதிய படைப்புகள் விளங்குவதைத் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக் கிறது. மார்க்ஸ், எங்கெல்ஸ், வெளின் ஆகியோரின் படைப்புகளிலுள்ள கருத்துகளுடன் பால் ஸ்வீஸி, எவால்ட் இலியன்கோவ், எர்னஸ்ட் ஃபிஷர், ஹாரி பிரேவர்மன், பெர்டெல் ஓல்மன், இஸ்ட்வான் மெஸ்ஜொரஸ், ஹொவார்ட் செல்ஸாம், டான் ஸ்வெயின் போன்ற பல்வேறு மார்க்ஸியச் சிந்தனையாளர்கள், மார்க்ஸியப் பொருளாதாரம், ‘அந்நியமாதல்’ முதலியன பற்றிக் கூறியுள்ள கருத்துகளும், மார்க்ஸிய அறவியல்பற்றிய விளக்கமும், ‘மானுடத்துவம்’, ‘அந்நியமாதல்’ ஆகியன பற்றிய லெனினின் ஆழமான புரிதலும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்படுகின்றன.