வ.உ.சி இந்திய விடுதலைப் போராட்டத்தில் வகித்த பாத்திரத்தின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளும் தேவை நமக்குண்டு, காங்கிரஸ் இயக்கத்திற்குள் வ.உ.சி. தீவிரவாத அரசியலை முன்னெடுத்தப் பாத்திரம் முக்கியமானது. அவர் நிகழ்த்திய தொழிலாளர் போராட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. தமிழக அரசியலில் காங்கிரஸ் இயக்கம் முன்னெடுக்காத வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் குறித்த வ.உ.சி. நிலைபாடு தனித்துவம் மிக்கது. மொழியாக்கம், பதிப்பு, உரையாக்கம், நீதிநூல் உருவாக்கம் ஆகியவற்றிலும் அவரது இடம் குறிப்பிடத்தக்கது. இத்தன்மைகளை அறிமுகப்படுத்து கிறது இக்குறுநூல்,
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவர்கள் பலர் நல்லாசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் செயல்படு கின்றனர். இவரது ஆய்வுகள் நூல் தொகுதிகளாகவும் குறுநூல் களாவும் வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள், அத்திப் பாக்கம் வெங்கடாசலனார். தோழர் பா. ஜீவானந்தம். வி. அரசு (1954…) புதுமைப்பித்தன் ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார்